நொடிப்பொழுதின் சின்னஞ்சிறு உலகத்திற்குள் எறும்புகளுக்கான ஒரு நெடுஞ்சாலை விரிந்து செல்வதைப்போல ரா.தினேஷ் வர்மாவின் கவிதைகள் சின்னஞ்சிறு சொற்களின் முதுகில் பேரனுபவங்களைச் சுமந்தபடி நம்மை வந்தடைகின்றன.
`குரங்கு பெடல்” என்கிற தலைப்பினூடாக இப்போதுதான் பழகிக்கொண்டிருக்கிறேன் என்கிற பவ்வியத்துடனும், அடக்கத்துடனும் வந்திருக்கிறான் என்றாலும், எல்லா வகைகளிலும் ஒடித்து நெளித்து, குனிந்து வளைந்து, படுத்து நிமிர்ந்து, தாவி உயர்த்தி வித்தை காட்டும் ஒருவனின் நேர்த்தியுடன் சொற்களில் விளையாடியபடி வித்தை நிகடிநத்துகிறான்.
Könyvek és tájékoztató kiadványok