ஒரு நூலை முழுவதுமாக ஓதிப் பாராயணம் செய்வதற்கு முற்றோதல் என்று பெயர். திருக்குறளில் உள்ள அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகியவற்றில் உள்ள 1330 குறட்பாக்களையும் முழுமையாக ஓதுதல் திருக்குறள் முற்றோதல் எனப்படும். இலக்கியங்கள் அனைத்திலும் சிறந்ததும் உன்னதமானதும், மனித குலம் அனைத்திற்குமாக உதித்த மேலானதும் ஆகிய தன்னிகரற்ற படைப்பு திருக்குறள். அத்தகைய சிறப்புமிக்க பொதுமறை எனப் போற்றப்படும் அறக்கருத்துக்களடங்கிய திருக்குறட்பாக்களின் மாண்பை வருங்கால மாணவர்கள் இளம் வயதிலேயே முற்றோதல் செய்தால், அவை பசுமரத்தாணி போல் பதிந்து, நெஞ்சில் நிலைத்து அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டும். திருக்குறளைப் பாராயணம் செய்ய முயலும் மாணவர்களுக்கு இச்செயலி மிகவும் பயனளிக்கும்.
ଗତ ଅପଡେଟର ସମୟ
ଜୁଲାଇ 8, 2025