புகழ் பெற்ற பாரத தேசத்தில் படிக்கப் படிக்க திகட்டாத எண்ணற்ற விசித்திரக் கதைகள் உலாவி வருகின்றன. அவைகள் காலத்தால் அழியாதவை. கேட்கக், கேட்க திகட்டாதவை. வர்ணிக்க முடியாதவை. அந்த வரிசையில் வருவது தான் நமது விக்கிரமாதித்தன் கதை. இது பல கிளைக் கதைகளைக் கொண்டது. அரபு தேசத்தில் ஆயிரத்து ஓர் இரவுகள் எப்படியோ அதே போலத் தான் நமது பாரத தேசத்தில் இந்த விக்கிரமாதித்தன் கதை.
இதனை நாங்கள் கதை வடிவில் தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். இந்த அற்புதப் பயன்பாடு உங்கள் நேரத்தை இனிமையாகக் கழிக்க உதவும் என்றும் நம்புகிறோம்.
இந்தப் பயன்பாட்டில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு,
1. பகல் பொழுதுக்கும் இரவுப் பொழுதுக்கும் தகுந்தார் போல உங்கள் கைப்பேசியின் பின்னணியையும், எழுத்துக்களையும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
2. அதுபோல எழுத்துக்களின் தோற்றத்தை தேவைப்பட்டால் அதிகரித்தோ, குறைத்தோ வைத்துக் கொள்ளலாம்.
3. நீங்கள் விட்ட பகுதியில் இருந்து மீண்டும் தொடரும் வசதி கொடுக்கப்பட்டு உள்ளது.
4. உங்களுக்கு பிடித்த பக்கத்தை குறிப்பில் (புக் மார்க்) சேர்த்துக் கொள்ளலாம்.
5. திரைக்குத் தகுந்தபடி கதைகளை சரி செய்து கொள்ளலாம்.
தங்களது மேலான கருத்துக்களை தயை கூர்ந்து நட்சத்திரக் குறியீட்டுடன் எங்களுக்கு தெரிவிக்கவும்.
புதுப்பிக்கப்பட்டது:
12 மார்., 2024