நாம் அழகிய தென்றல் காற்றில் பெங்களுரூ, கொல்கத்தா போன்ற பலதரப்பட்ட ஊர்களில் ஆட்டோக்களில் பயணம் செய்து உள்ளோம். அந்தப் பயண அனுபவத்தை இந்த விளையாட்டில் அப்படியே தந்து உள்ளோம். இதோ இது உங்கள் சென்னை ஆட்டோ, இதனை உங்கள் கைகளில் கொடுத்து உள்ளோம். சென்னையின் சாலைப் போக்குவரத்துப் பற்றி உங்களுக்குத் தெரியும் அல்லவா? அப்படிப் பட்ட சென்னையின் நெடுஞ்சாலையில் இந்த ஆட்டோவை எந்த வண்டியின் மீதும் மோதாமல் அதிவிரைவாக செலுத்துவதே இந்த விளையாட்டின் நோக்கம் ஆகும்.
நீங்கள் இந்த ஆட்டோவை வேகமாகவும் ஓட்ட வேண்டும், அதே சமயத்தில் விவேகமாகவும் ஓட்ட வேண்டும். இந்த விளையாட்டு உங்களுக்கு நிச்சயம் ஒரு பந்தய அனுபவத்தை கொடுக்கும் என்று நம்புகிறோம். நான்கு தடங்களில் இந்த ஆட்டோவை நீங்கள் ஓட்டலாம். அவை பின்வருமாறு
1. ஒன் வே முடிவில்லாதது
2. இரண்டு வழிகள் முடிவில்லாமல் செல்லுதல்
3. நேரத்தை அனுசரித்து விரைவாக வண்டி ஒட்டுதல்
4. போலீசார் வாகனத்துடன் போட்டி போட்டுச் செல்லுதல்
இந்த ஆட்டோவில் நீங்கள் வேகத்தை குறைக்கலாம், கூட்டலாம், பிரேக் பயன்படுத்தி நிறுத்தலாம், தேவைப்பட்டால் ஒலியை எழுப்பி மற்ற வாகனங்கள் மீது மோதாமல் உங்கள் வாகனத்தை விரைந்து செலுத்தலாம். சுருக்கமாகச் சொல்லப் போனால் இது உங்கள் நேரத்தை கொல்லும் விளையாட்டு. இது சூப்பர் ஸ்டார் பாட்ஷா ஆட்டோ. விளையாடிப் பாருங்கள் நேரம் போவதே உங்களுக்குத் தெரியாது.
அவசியம் இது பற்றி உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய மறந்து விடாதீர்கள். உங்கள் கருத்துக்கள் அனைத்தும் எங்களுக்கு பொன் போன்றது.
புதுப்பிக்கப்பட்டது:
10 டிச., 2017