அப்போது எனக்குள் ஏற்பட்ட மனப்பதிவுகளை நூலில் இடம்பெறச் செய்துள்ளேன்.
இந்தியாவின் வளர்ச்சி குறித்த என்னுடைய எதிர்பார்ப்பும் ஆங்காங்கே வெளிப்பட்டுள்ளது.
சீனாவுக்கு இன்னும் பலமுறை பயணம் செய்தாலும் புதிய புதிய அனுபவமும் சிந்தனையும் தோன்றும் என்பது எனது கருத்து.
- ராஜேஷ் திரைப்படக் கலைஞர்திரைப்படக் கலைஞர் ராஜேஷ் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர். கன்னிப்பருவத்திலே, அச்சமில்லை அச்சமில்லை , ஆலய தீபம், சிறை, மக்கள் என் பக்கம், நிலவே மலரே, மகாநதி, சத்யா, ஆட்டோகிராப் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது ஆளுமையை வெளிப்படுத்தியவர். திரைப்பட நுணுக்கங்களை நன்கு அறிந்தவர். கலைமாமணி உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.
சிறந்த உலக சினிமாக்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு வெளிவந்துள்ள இந்த நூல் தமிழ் சினிமாவில் சாதனை புரியும் எண்ணம் கொண்ட புதிய தலைமுறையினருக்கு உத்வேகம் ஊட்டக்கூடியது.