நெடுநல்வாடை என்றால் நீண்ட நல்ல வாடைக் காற்றைப் பற்றி பாடற்கூடிய பாட்டு என்று அர்த்தம்.தலைவனைப் பிரிந்து துன்பத்தில் வாடும் தலைவிக்கு துன்பம் தரும் நீண்ட வாடையாகவும் தன் கடமை முடிப்பதற்காக சென்ற தலைவனுக்கு நல்ல வாடையாகவும் இது விளங்குவதால் நெடுநல்வாடை என்று பெயர் பெற்றது.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரர் இந்த நூலின் ஆசிரியர். பத்துப்பாட்டு நூல் வகையில் முதல் நூலான திருமுருகாற்றுப் படையை பாடிய நக்கீரர்தான் இந்த நூலையும் ஆக்கியுள்ளார்.
இந்த நூல் முழுவதும் அகப்பாடலுக்குரிய செய்திகளை மிகுதியாக இடம் பெற்றுள்ளன. இருப்பினும் வேம்புதலையாத்த என்ற சொற்றொடர் பாண்டிய மன்னனுக்கு அடையாளமாக விளங்கும் வேப்பமாலையை குறித்ததாகும்.
முழுக்க அகத்திணை வரிசையில் அமைந்த இந்த நூலில் தலைவன் பாண்டியன் என்று குறிப்பால் அறிவுறுத்தியதால் இது அகப்பாடலானது. 188 அடிகளைக் கொண்டது நெடுநல்வாடையாகும்.