பொதுவாக, பழந்தமிழர்களின் வரலாற்று பெருமையை விளக்கும் நூல் என்று இதனைச் சொல்லலாம். இந்த நூலின் பதிகங்களை பிற்காலத்தில் வந்த சான்றோர்களின் ஒருவரோ, பலரோ தொகுத்து கூறியிருக்கலாம்.
இந்த நூல் பாடாண் திணையில் அமைந்த நூலாகும். பிற திணைகளையும் துறைகளையும் சான்றோர்கள் வகுத்திருக்கின்றனர்.
இந்த நூலில் முதல் பத்து செய்யுட்களும் இறுதி பத்து செய்யுட்களும் கிடைக்கவில்லை. எட்டுத் தொகை நூல்களில் பதிற்றுப்பத்தும், புறநானூறும் தான் புறத்திணை நூல்களாகும்.
மற்ற ஆறும் அகத்திணைச் சார்ந்த நூல்களாகும். பழங்கால தமிழகத்தில் விளங்கிய வீரமும், கொடையும், புலமையும், ஒழுக்கமும், அறநெறியும், இந்த நூலில் பரவலாக காண இயல்கிறது.
மூவேந்தர்களின் முதலாம் மன்னர்களான சேர மன்னர்களில் பத்துப் பேரைப் பற்றி ஒவ்வொருவருக்கும் பத்துப் பாடல் வீதம் போற்றிப் பாடப்பட்டுள்ளது. பத்து மன்னர்களைப் பற்றிப் பத்துப் பத்து பாடல்களாக பாடப்பட்டுள்ளதால் இந்த நூல் பதிற்றுப்பத்து என்று பெயர் பெற்றது.
பல்வேறு பொருள்செறியும், சொற்சுவையும் நிறைந்த இந்த நூலை முதன் முதலாக அச்சில் ஏற்றிய பெருமை தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத அய்யர் அவர்களே சேரும்.