ஆயிரம் கோணங்கிகள் செய்து அப்புசாமி சீதாப்பாட்டியை அழவைப்பார். அவருடைய முன் கோபமும் அசட்டுத்தனங்களும் இறுதியில் சீதாப்பாட்டிக்கு வெற்றியைத் தேடித் தரும்.
படாத பாடுபட்டு அப்புசாமி பெற வேண்டிய புகழை நொடியில், சீதாப்பாட்டி தட்டிப் பறித்துக் கொள்வார்.
மிகச் சிறந்த நகைச்சவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி அவர்களால் எழுதப்பட்ட அப்புசாமி சிறுகதைகளாக தொகுக்கப்பட்டதே இந்நூல்.
வாசகர்களாகிய நீங்கள் படித்து ரசிப்பீர்கள் என்ற திடமான எண்ணத்துடன் இந்த அப்புசாமி நகைச்சுவை தொகுப்பை வெளியிட்டுள்ளோம்.