நம் வாழ்க்கை மிகவும் அதிசயமானது. சில நேரங்களில் சந்தோஷத்தை வாரி இறைக்கும், சில நேரங்கள் கஷ்டங்களை. ஆனால் நம் மனிதர்கள் சந்தோஷங்களை சமமாக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு கஷ்டங்களை தாங்கிக் கொள்வதில்லை. சற்றே நினைத்துப்பாருங்கள் நம் வாழ்க்கையில் வெறும் சந்தோஷங்கள் மட்டும் இருந்துவிட்டால் பின்பு நம் வாழ்க்கையில் சுவாரஸ்யங்கள் ஏது?
இப்புத்தகத்தில் நான் நம் வாழ்க்கையில் கஷ்டங்களும் சரி, சந்தோஷங்களும் சரி, எப்படி எல்லாமே சரிசமமாகக் கடந்து போகிறது அதை நாம் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தொகுத்துள்ளேன்.
"இந்த நிமிடமே நமக்கானது" அதை சந்தோஷமாக வாழ போகிறோமா அல்லது தடைகளை உணர்ந்து, அதை எதிர்கொண்டு வாழ்ந்து காட்ட போகிறோமா என்ற முடிவு நம் கையில்.
"எல்லாம் நன்மைக்கே" என்று நம்புங்கள் நல்லதே நடக்கும் - எழில்.