அவளை விரும்பி மணந்த தயாளன், அவளுக்குத் தன்னை புரிய வைக்க முயற்சிக்கிறான். ஒவ்வொரு முறையும் தோல்விதான் அடைகிறான். அவன் மனதிற்குள் பதிந்த தேவதை அவள். அந்த தேவதையின் மகிழ்வான வாழ்வே அவன் லட்சியம்.
இதை ஒருநாள் உதய பானம் புரிந்து கொள்கிறாள். அவனின் ஆழ்ந்த அன்பையும் அவன் செய்த ஒவ்வொன்றும் தனக்கானது என்று புரிய வர அவளுக்குள் பொங்கி பெருகும் காதல் உணர்வில் தானும் நனைந்து, தயாளனையும் நனைக்கிறாள். நல்ல எண்ணங்கள் மனதிற்குள் இருந்தால், நாம் நினைத்த அனைத்துமே நிறைவேறும்.