Hitler - Oru Nalla Thalaivan

· Pustaka Digital Media
4.3
6 reviews
Ebook
76
Pages
Ratings and reviews aren’t verified  Learn More

About this ebook

“உலகை உறைய வைத்த இனப்படுகொலைகள்” எழுதிய ஆசிரியரிடம் இருந்து இப்படி ஒரு நூல் யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள். ஏன் நானே எதிர்ப்பார்க்கவில்லை என்று சொல்லலாம்.

பல நாடுகளில் இனப்படுகொலையை பற்றி பேசியவன், எப்படி உலகமே அஞ்சி நடுங்க செய்து, இனப்படுகொலைகள் நடத்திய ஒருவனை ’நல்ல தலைவன்’ என்று சொல்கிறேன் என்று வியக்கலாம். என்னை நீங்கள் தூற்றலாம். சபக்கிலாம். எனக்கு கவலையில்லை.

’ஹிட்லர்’ என்ற தனி ஒருவன் இல்லை என்றால் இன்றைய உலக வரைப்படம் இவ்வளவு மாற்றம் கண்டிருக்காது. இரண்டாம் உலகப் போர், யூத இனப்படுகொலை என்ற இரண்டு தவறுகளுக்கு பின்னால் ஹிட்லரின் பல குணங்கள் மறைக்கப்பட்டிருக்கிறது. பல திட்டங்கள் திசைத்திருப்பப்பட்டிருக்கிறது. அவனுடைய நாட்டுப் பற்று மறக்கடிக்கப்பட்டிருக்கிறது.

உண்மையில் ஹிட்லர் யூத எதிரியாக மட்டும் இருந்திருந்தால், அமெரிக்கா, சோவியத், பிரிட்டன் அவரை அழிக்க நினைத்திருக்காது. அவருக்கு எதிராக போர் களத்தில் நின்று இருக்க மாட்டார்கள். யூத இனப்படுகொலையை ‘சகோதர யுத்தம்’ என்று கூறியிருப்பார்கள். (இலங்கையில் நடந்த தமிழர் இனப்படுகொலைக்கு அவர்கள் கூறிய வார்த்தை தானே!) ஜெர்மனியின் உள்நாட்டு விவகாரம் என்று சொல்வார்கள். அதிகபட்சம், யூத இனப்படுகொலைக்காக கண்டத்தை மட்டும் தெரிவித்து விட்டிருப்பார்கள்.

காரணம், ஹிட்லரின் யூத மக்களின் மரணம் அவர்களை எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தப் போவதில்லை.

ஹிட்லர் தீவிர ஜெர்மன் விஸ்வாசி. அது தான் அவருடைய பெரிய பிரச்சனையாக இருந்தது. உலகமே ஜெர்மனியை கண்டு அஞ்ச வேண்டும். உலகத்தின் மிகப் பெரிய வல்லரசு ஜெர்மனி மட்டுமே இருக்க வேண்டும் (ஆரிய சமூக இருக்க வேண்டும்). ஜெர்மனி பங்கில்லாமல் உலகின் எந்த விஷயமும் நடக்கக் கூடாது.

நாடி நரம்புகளை கடந்து ஹிட்லரின் ஒவ்வொரு செல் அணுக்களும் ஜெர்மனியை நேசித்தது. ஜெர்மனியை ஸ்வாசித்தது. ஜெர்மனிக்காக எதையும் செய்ய துடித்தது. சர்வமும் ஜெர்மனி மயமாக இருக்க வேண்டும். இது தான் மற்ற உலக வல்லரசு நாடுகளை உருத்தியது. அதை அழிப்பதற்கு யூத இனப்படுகொலையை தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர் என்பதை அவர்களால் மறுக்க முடியாது.

ஹிட்லர் தவறான வழியில் சென்று இருக்கலாம். தவறான சிந்தனை இருந்திருக்கலாம். ஆனால், அவர் ஒரு நல்ல தலைவர். வீழ்ந்து கிடந்த ஜெர்மனி சமூகத்தை முருக்கேற்றி நிமித்தியவர். கடனாளியான ஜெர்மனியை குறுகிய காலத்தில் தலை நிமிரச் செய்தவர். இனி எந்த நூற்றாண்டிலும் தனது நாட்டை வெறித்தனமாக நேசித்த தலைவன் பிறக்க முடிக்க முடியாது.

ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றை பற்றி தமிழில் மூன்னூறுக்கு மேற்பட்ட நூல்கள் வந்திருக்கும். அதில், இதுவும் ஒன்றாக எனக்கு விருப்பமில்லை. அதனால், இந்த நூல் ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றாக இருக்காது.

அதே சமயம் இந்த புத்தகத்தில், ஹிட்லரின் யூத இனப்படுகொலையையும், இரண்டாம் உலகப் போரையும் நியாயப்படுத்துவதற்காக இல்லை. நியாயப்படுத்தவும் முடியாது. இந்த இரண்டை தவிர்த்து ஹிட்லருக்கு இன்னொரு முகம் இருக்கிறது. ஹிட்லர் என்ற நல்ல தலைவன் பக்கம். அதை சொல்லப் போவது தான் இந்த புத்தகம்.

ஒரு வேலை ஹிட்லர் வெற்றியாளராக இருந்திருந்தால், பலர் அவர் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியிருக்கலாம். அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் போன்ற வல்லரசுகளைப் பற்றி பேசுவதற்கு பதிலாக ஜெர்மனி என்ற ஒன்றை நாட்டின் வல்லரசு வரலாற்றை மட்டும் படித்திருப்போம். ஏறக்குறைய ஹிட்லர் பாதியளவில் சாதித்துவிட்டார். ஆனால், தனது அதித நம்பிக்கை, ஆணவம், பிடிவாதம் அனைத்தும் சேர்ந்து கிடைத்த வெற்றியை அனைத்தும் இழந்தார்.

’ஹிட்லர்’ என்ற சர்வாதிகாரியைப் பார்ப்பதை விட, ஒரு வெற்றியாளராக அவரின் வாழ்க்கை வரலாற்றை அனுகினால் அதில் கிடைக்கும் அனுபவம் வித்தியாசமானதாக இருக்கும். பில் கேட்ஸ், இன்போஸிஸ் நாராணய மூரித்தி, திருப்பாய் அம்பானி, அசிஸ் பிரேம்ஜி, சுந்தர் பிச்சை போன்ற பிஸினஸ் வல்லுநர்களின் வாழ்க்கை வரலாற்றை விட உத்வேகமானது ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு. ஹிட்லரின் பொன்மொழிகள் உற்சாகமுட்டும் பொன்மொழிகள். அப்படிப்பட்ட மனிதனை உலகம் கெட்டவனாக மட்டுமே காட்டியிருக்கிறது. அவரின் நேர்மறையான (Positive) பக்கத்தை காட்டுவது இந்த புத்தகத்தின் நோக்கம்.

அதனால், சில வரலாற்று சம்பவங்கள், நிகழ்வு மிக சுருக்கமான சொல்லியிருப்பேன். ஹிட்லரின் திட்டங்கள், குணங்கள், எண்ணங்கள் பற்றி அதிகமாக சொல்லியிருப்பேன்.

இந்த புத்தகம்,
ஹிட்லரின் வாழ்க்கை வரலாறல்ல
ஹிட்லரை உருவாக்கிய வரலாறுமல்ல…
ஹிட்லர் உருவாக்கிய வரலாறு!!
இந்த புத்தகம் முடிக்கும் போது நீங்களும் சொல்வீர்கள், “ஹிட்லர்: ஒரு நல்ல தலைவன்” என்று!!

அன்புடன்,
குகன்.

Ratings and reviews

4.3
6 reviews

About the author

32 வயதுடைய மென்பொருள் வல்லுநரான இவரது இயற்பெயர் கண்ணன். இவர் எல்லா விதமான புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை, வரலாறு, சினிமா, நாவல் மற்றும் பல புத்தகங்களை எழுதியுள்ளார். கலீலியோ கலிலீ (வரலாறு), உறங்காத உணர்வுகள் (கவிதை), நடைபாதை (சிறுகதை), பெரியார் ரசிகன் (நாவல்) போன்ற எழுத்துக்கள் சில எடுத்துக்காட்டாகும். இவர் பெற்ற விருதுகள் Bharathi Paniselvar Award – Given by ‘All India Writer Association’ and NRK Award 2013 (1st prize in essay category )– Given by Nam Urathasinthanai for the book ‘உலகை உறையவைத்த இனப்படுகொலைகள்’

Rate this ebook

Tell us what you think.

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.