"ம்ம்..." அவள் கூந்தலை அவன் அளைந்து கொண்டிருந்தான்.
"நமக்குள்ள அடிக்கடி சண்டை வருதில்ல. நானும் சண்டை போடக்கூடாதுன்னு தான் நினைக்கறேன். பட் ஸ்டில்..." என்று வருத்தப்பட்டாள் சாதனா.
"சண்டை போடாத புருஷன் பொண்டாட்டி உலகத்துல எங்கயுமே இருக்கமுடியாது. வெறும் இனிப்பு மட்டுமே சாப்பிட்டுட்டு இருந்தா திகட்டிடும். அப்பப்போ இப்படியொரு மிளகாய் பஜ்ஜியும் வேணும். கொஞ்சம் சண்டை. நிறைய லவ். முடிவில் சமாதானம். இதெல்லாம் சேர்ந்ததுதான் வாழ்க்கை...! எவ்வளவு சண்டை போட்டாலும் சமாதானமா போக ஒரு இடம் இருக்கு."
ஹரி-சாதனா காதலை அறிய கதைக்குள் செல்வோம் மக்களே!
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.