[ஷானு]ஷாந்தினிக்கும், [சஜி]சஞ்சய்க்கும் நடுவே முட்டுக்கட்டை போல் லோசினி யார்? கௌதமன் யார்?
தன் சுட்டித்தனத்தால் மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகுக் குழந்தை மஞ்சுஷா..!
இந்தக் கதாபாத்திரங்களுக்கு நடுவில் அந்தக் குட்டி தேவதைக்கு என்னவிதமான பிரியங்கள், இடையூறுகள். கதைக்குள் செல்வோம்.
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.