“ஆமாம்... உன்மேல ஒரே கோவமா இருக்கா... ஒரு சகோதரனா நீ அவ பிறந்தநாளை மறந்துட்டயாம்.”
“ஹ...ஹ... நானாவது மறக்கறதாவது? நான் கொடுக்க வேண்டிய கிஃப்டை மீனு கொண்டு போய் கொடுப்பா... எப்படி அசத்தப்போறேன் பாரு.”
அவன் சொல்லி முடிக்கவும் மீனு அலைபேசியில் அழைக்கவும் சரியாக இருந்தது.
“தின்க் ஆப் தி டெவில் அண்ட் ஹியர் இட் கால்ஸ்... நம்பரைப் பார்த்தாலே கண்ணைக் கட்டுதே....” முனகிக்கொண்டே அலைபேசியை காதுக்குக் கொடுத்தான் வசந்தன்.
“நீங்க ஏதும் ஸ்டியரிங் பிடிக்கறேன்னு உட்காரலயே?. புது வண்டிங்க... பாவம்... ஷ்யாமளன் லோன் போட்டு வாங்கியிருக்காரு... போனா போகுதுன்னு விட்டுடுங்க. இன்னும் பைக்கே உங்களுக்கு சரியா ஓட்டத் தெரியல. விஷப்பரிட்சையெல்லாம் வேண்டாம். வழியில நல்ல ஹோட்டலா பார்த்துச் சாப்பிடுங்க. காசை மிச்சப்படுத்தறேன்னு கண்ட இடத்துல தின்னா வயித்துவலிதான் வரும். பாண்டிச்சேரி தானேன்னு உங்க தீர்த்தத்தைத் தேடிப் போகாதீங்க. பெங்களூர் போயிட்டு வந்து என்கிட்ட வாங்கினது ஞாபகம் இருக்கா?”
“து….ரோ…..கி.....” என்று ஷ்யாமளனைத் திரும்பிப் பார்த்து முறைத்தான் வசந்தன். மீனுவின் அறிவுரை தொடர்ந்துகொண்டே இருந்தது.
“என்ன கொடுமை சரவணா இது?” அழாத குறையாக தலையில் கைவைத்துக் கொண்ட நண்பனின் நிலைகண்டு பொங்கிச் சிரித்தான் ஷ்யாமளன்.
மற்றவை கதையில்...
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.