கதை சொல்வது முதியவர்களின் அனுபவக்கொடை; கேட்பது இளையவர்களின் ஆனந்த நிலை. இது ‘நேற்று இன்று வந்தது அன்று’; ‘நெடும் பண்டைக்காலம் முதல் நேர்ந்து வந்ததாம்’, நாடோடிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், ஈசாப் கதைகள், 1001 இரவுகள் என்று பலப்பல பெயர்களில் கதைகள் கூறும் பாங்கும் போக்கும் பல்வேறு கால கட்டங்களில் உலகெங்கும் வளர்ச்சி பெற்றிருக்கின்றன. இந்தச் சிறுகதைகளின் சுவையையும் தேவையையும் உணர்ந்த இதிகாச, காப்பிய ஆசிரியர்களுக்கும்கூடச் சிறுகதைகளைக் கிளைக் கதைகளாக இணைத்துக்கொண்டு செல்ல வேண்டிய நெருக்கடிகளும் ஏற்பட்டிருக்கின்றன. சிறுகதை என்று எதைக் கூறுவது? எதற்காகக் கூறுவது? எப்படிக் கூறுவது? இவை, சொல்லப்பட்ட காலச் சூழலையும், கதை ஆசிரியனின் நோக்கத்தையும், கதை கேட்போரின் மனப்பக்குவத்தையும் பொறுத்தது. சிறுகதையின் சுவை குன்றாமல் உள்ள முறிந்த அம்பை வாசிக்கலாமா இந்திரா சௌந்தர்ராஜனின் பாணியில்...