ஜெஃப் கெல்லர் ஒரு பிரபல நூலாசிரியர், பேச்சாளர், கருத்தரங்குகளைத் தலைமை தாங்கி நடத்தி வருபவர். ‘ஆட்டிடியூட் இஸ் எவ்ரிதிங்’ என்ற நிறுவனத்தின் தலைவர் அவர். சட்டம் படித்துள்ள ஜெஃப், ஒரு பேச்சாளராக ஆவதற்கு முன்பு பத்து ஆண்டுகள் ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். பெரும் சாதனையாளர்களை உருவாக்க விரும்புகின்ற நிறுவனங்களுடனும், தங்கள் கீழ் வேலை பார்ப்பவர்கள் நேர்மறையான மனப்போக்குடன் இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற விற்பனை மேலாளர்களுடனும் அவர் இணைந்து பணியாற்றி வருகிறார். மனப்போக்கு மற்றும் வெற்றி குறித்து ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் நடத்தி வந்த இதழை நார்மன் வின்சென்ட் பீலும் ஜிக் ஜிக்லரும் பெரிதும் பாராட்டியுள்ளனர்.