வாசிப்பது என்பது வாழ்க்கையை ஜீரணிப்பது என்று சொல்லக் கேள்வி. இதிலுள்ள சிறுகதைகள், வெவ்வேறு சின்ன சம்பவங்கள் என்னுள் கிளறி எழுப்பிய கற்பனைகள். "அய்ஸ்வர்யா ராய்,அருந்ததி ராய், இருவரையும் அங்கீகரிக்கலாம் இரண்டு அழகிராய்! ஒன்று - தோல் வனப்பு ஒன்று - நூல் வனப்பு முன்னதை - மூப்பு தின்னும் பின்னது- மூப்பைத் தின்னும்” இது வாலிப கவிஞர் வாலியின் வரிகள்! வேடிக்கிய போலத் தோன்றினாலும் வாஸ்தவம்தானே? வாசிப்பு, வாழ்வை அர்த்தப்படுத்தி, நம் புரிதலை ஆழப்படுத்தி, நம் ரசனையை அதிகப்படுத்தும் ஒரு அற்புதம் இவற்றை நான் ரசித்து எழுதியதைப் போல, ருசித்து வாசிப்பீர்கள் என நம்பிகிறேன்.