பவித்ரா, ரூபாவிற்கு இடையே படிக்கும் காலத்தில் அரும்பிய நட்பு, அந்த இளம் பெண்கள் இணைந்து வேலை பார்க்கும் வரைக்குமாய் வளர்கின்றது. மலை கிராமம் ஒன்றிற்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் பொறுப்பேற்கும் அவர்களுக்கு நம்பவே முடியாத அனுபவங்கள் காத்திருக்கின்றன. சீட்டுக்கட்டின் 52 சீட்டுகளைக் கொண்டு வித விதமான அமைப்புகளை உருவாக்குவது ஒரு கலை. துல்லியமாய் அவற்றை இரண்டு, மூன்று அடுக்கு மாளிகையாய் கூட எழும்பி விடலாம்- அதற்கான திறமை இருந்தால்... ஆனால் சுவை நிலைத்து நிற்குமா என்ன? அதே போல சிநேகிதிகளின் வாழ்வில் நம்ப முடியாத அதிசய நிகழ்வுகள் காத்திருக்கின்றன. காதல், பயம், மர்மம், குழப்பம் - கலந்து எழும் அவர்களது மாளிகை சீட்டுக்கட்டாய் சரிந்து, சிதறுமா அல்லது சுவாரஸ்யம் குறையாமல் நிற்குமா? நிச்சயம் இது உங்களை வெகு சுவாரஸ்யமான உலகிற்கு கூட்டிப் போகும்...