தனது பொன்னியின் செல்வன் சரித்திரத்தில் அமரர் கல்கி மட்டும் இந்தக் கொலையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்காவிட்டால், ஆதித்த கரிகாலனின் கொலையைப் பற்றி நமக்குத் தெரியாமலேயே போயிருக்கும்.
அனைவருமே ஆதித்த கரிகாலனின் மர்மக் கொலையைப் பற்றி மட்டுமே விவாதித்துக் கொண்டிருக்கின்றனரே தவிர, அவனது பிறப்பில் தொடங்கி, இறப்புவரை நிலவிய மர்மங்களைப் பற்றியோ, அவனை மணம் முடிக்கப் பெண்கள் பயந்தனர் என்பது பற்றியோ ஏன் இதுவரை யாருமே ஆய்வு செய்யவில்லை?
கெடில நதியைக் கடந்து தெற்கே செல்ல ஆதித்த கரிகாலனுக்கு அவனுடைய பாட்டனார் மலையமான் தடை விதித்திருந்தார். எதனால்? சோழ இளவரசன் ஏன் தஞ்சை செல்லத் தயங்கினான்? அவனது பிறப்பின்போதே அவனை விரட்டத் தொடங்கிய மரணம், 29 வயதில் அவனைக் கைப்பற்றியது. அவனது வாழ்வில் நிகழ்ந்த மர்மங்களை விளக்கும் கதைதான் இந்தக் கூடலழகி.
டி ஏ நரசிம்மன் என்கிற காலச்சக்கரம் நரசிம்மா கடந்த முப்பத்தி ஐந்து வருடங்களாக பத்திரிக்கையாளராக திகழ்கிறார். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியை துவக்கியவர் தற்போது . தி ஹிந்து ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருக்கிறார். சுமார் 15 நாவல்களை எழுதி இருக்கும் இவரது முதல் நாவல் காலச்சக்கரம், வெளியிடப்பட்டு பரபரப்பாக விற்பனையாக, இவரது பெயர் காலச்சக்கரம் நரசிம்மாவாக மாறியது. இவரது ரங்கராட்டினம் நாவலை படித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரை அழைத்து பேசி பாராட்டி, திருவரங்கத்தில் போட்டியிட போவதாக அறிவித்தார். சங்கதாரா , பஞ்ச நாராயண கோட்டம், கர்ணபரம்பரை, குபேரவன காவல், அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா போன்ற இவரது நாவல்கள் இவருக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளன. தற்போது இவர் எழுதியுள்ள ஐந்து பாகங்களை கொண்ட அத்திமலைத்தேவன் பெரும் பரபரப்புடன் விற்பனையாகி கொண்டிருக்கிறது.
சின்ன திரைகளில் கிருஷ்ணா காட்டேஜ், அபிராமி, அனிதா வனிதா, மாயா போன்ற தொடர்கள் உள்பட பல தொடர்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு சிறப்பு அரசியல் விமர்சகராகவும் கட்டுரைகள் எழுதி உள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை வசனகர்த்தா சித்ராலயா கோபு, மற்றும் எழுத்தாளர் கமலா சடகோபனின் மகன் ஆவார். இவரது மகன் ஷ்யாம் திருமலை என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் துணை மற்றும் இணை இயக்குனராகவும், மகள் ஸ்ரீயந்தா இயக்குனர் ராதாமோகனின் காற்றின் மொழி மற்றும் பொம்மை படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளனர்.
குமுதத்தில் தற்போது மூவிடத்து வானரதம் என்கிற சரித்திர தொடர்கதையை எழுதி வருகிறார்.
காலச்சக்கரம் நரசிம்மா அவர்களை [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்