அந்த கடமை வீரனின் லட்சியம் மகத்தானது. அவன் பொதுவுடமை இயக்க உட்பொருளின் குறியீடாய் இயங்குகிறான். அவன் மனது தான் பெற்ற அத்தனையையும் இளையதலைமுறையினர் அனைவரும் பெற வேண்டும் என துடிக்கிறது.
அவனே இத்தனை நாள் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு கிராமத்து மனிதன் தான். ஆனால் அவன் எண்ணங்களின் பாதைகளில் அயராது பயணிப்பவன். மக்கள் புரட்சியில் பங்கெடுத்துக்கொண்டதால் அவனுக்கு எழுதப் படிக்க தெரிந்துகொள்கிற வாய்ப்பு வாய்க்கிறது. அதை தன் கிராமத்திற்குள் கொண்டு செல்லும் சாத்வீக யுத்தத்தை நம்பிக்கையோடு கையில் எடுக்கிறான். அவனின் இதயத்திற்கு மிக நெருக்கமான அந்த இளம் ஜீவன் அல்டினாய் அதை தூய்சன் மீதான நேசத்தின் பெயரால் நிறைவேற்றிக்காட்ட படும்பாடு, அவளின் நேசத்தை புடம்போட்டுக் காட்டும் காதல் சாசனங்கள். சிங்கிஸ் ஐக்மத்தாவின் “ஃபஸ்ட் டீச்சர்” திரைக்கதையை தழுவி புதிய மொழி ஆக்கமாய் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நாவலும் அப்படியே.
இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.
டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.
குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.
திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.