கதையும் கற்பனை கதையல்ல... நிஜம் தான்...!
மாதங்கி நம்மில் ஒருத்தி தான்... எனக்கு நெருக்கமான நட்பு வட்டத்தில் உள்ள பெண் தான்... இவளது திறமையையும் மேதாவிலாசத்தையும் கண்டு வியந்திருக்கிறேன்.
ஒரு நல்ல தாயால் வளர்க்கப்பட்டவள். பொறுமையையும் சகிப்பு தன்மையையும் தன் இரு கண்களாக கொண்டவள். புகுந்த வீட்டில் தனக்கு இழைக்கப்பட்ட அத்தனை கொடுமைகளையும் சகித்துக் கொள்கிறாள்.
டாக்டராய் இருந்தும் கை நிறைய சம்பாதித்தும் சகலத்தையும் பொறுத்துப் போகிறாள். ஒரு கட்டத்தில் யாராய் இருந்தாலும் வெகுண்டு எழுவார்கள். எத்தனையோ கதைகளில் கிளைமாக்ஸில் கதாநாயகி தான் எரிமலையாய் வெடிப்பாள். ஆனால் இக்கதையில் வெகுண்டு எழுந்து புரட்சிகரமாய் முடிவெடுப்பது அவளல்ல...!
அது யார் என்பதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்...