“ஆ...” என்று அலறியவன், “இதுக்கு நான் ஆந்திராவுக்கு அடிமாடா போயிருக்கலாம். டென்ஷன் ஆகறதுக்கு இதுல என்ன இருக்கு? யுத்தத்துக்கா போறோம்? வெறுமனே அந்தப் பொண்ணையும், குடும்பத்தையும் எச்சரிக்கை செய்யத்தானே இதை போன்ல கூடச் சொல்லியிருக்கலாம். நம்ம செலவுல வண்டி போட்டுட்டு போகலேன்னா என்ன? வெட்டி வேலை! தண்டச் செலவு!” என்று தைரியமாகப் புலம்பத் தொடங்கிவிட்டான் சிவா. “அப்படியே போன்ல சொல்லி இவங்க கேட்டுட்டாலும்! வளைச்சு போட எவன் கிடைப்பான்னு...” என்று ஆரம்பித்த கங்காதரன், தன்னருகே டிரைவர் இருப்பதை உணர்ந்து, அத்தோடு அந்த விஷயத்தை நிறுத்திக் கொண்டார்.
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.