மூலிகை என்பவை மனிதனின் ஆதிகாலம் தொட்டே மனிதனின் ஆரோக்கியமான வாழ்வுக்கு உறுதுணையாக இருந்தவை, எல்லா நாடுகளிலும் மருத்துவ வரலாறு மூலிகைகளை அடிப்படையாக கொண்டே அமைந்தன, ஒவ்வொரு நாகரீகமும் செழித்து வளர நோயில்லா வாழ்வு மிக அவசியம், மனிதன் தோன்றிய முதலே அவனுடன் கர்ம வினை மற்றும் சில காரணங்களால் நோய்கள் அவனை வாட்டின, நோய் என்பது மனிதன் அடுத்த படி நிலைக்கு செல்லாமல் தடுத்து அவனை முடக்கும் வகையில் இருந்தன, எல்லாவற்றுக்கும் இயற்கையை நம்பியே இருந்த மனிதன் நோய் நீங்கவும் இயற்கையை நம்பியே இருந்தான், அப்படி இருந்தபோது அவனுக்கு முதலில் உதவியது முலிகைகளே, மூலிகைகளை அடிப்படையாக வைத்து பாரத திருநாட்டில் சித்த மருத்துவம், ஆயுர் வேதம், யுனானி உள்ளிட்ட முறைகளும், சீன மருத்துவம், எகிப்திய மருத்துவம், பழங்குடி மருத்துவம் என எல்லா தேசங்களிலும் நோய் நீக்கும் முறைகள் இருந்தன.