பழநியப்பர், மனோம்மணி தம்பதியினருக்கு மகனாக முத்தையா தேவக்கோட்டையில் பிறந்தார். 15 வயதில் இவரின் தந்தை பர்மாவில் நடத்தி வந்த கடையைப் பார்த்துக்கொள்ளச் சென்றார். இரண்டாம் உலகப் போரின் போது நடந்தே தாயகத்துக்கு திரும்பினார். 1943 ல் முல்லை என்ற பதிப்பகத்தினை உருவாக்கி பாரதிதாசன், கோவை அய்யா முத்து போன்றோரின் நூல்களை வெளிட்டமையால் இயற்பெயரான முத்தையா என்பது முல்லை முத்தையா என்று வழங்கப்பெற்றது.