Pachai Sivan Kaadu

· Pustaka Digital Media
Liburu elektronikoa
115
orri
Balorazioak eta iritziak ez daude egiaztatuta  Lortu informazio gehiago

Liburu elektroniko honi buruz

பச்சை சிவன் காடு மிகவும் விறுவிறுப்பான ஒரு அமானுஷ்ய நாவல் இயற்கை எழில் சூழ்ந்த மலைப் பகுதியில் இருக்கும் காட்டாற்றில் குளித்துக் கொண்டிருக்கிற இளம்பெண்... செங்குருவியின் கையில் ஒரு மரகதலிங்கம் (பச்சைசிவலிங்கம்)அகப்படுகிறது மரகலிங்கத்தை மலை கோயிலில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என நினைக்கிறாள்.ஆனால் அந்த மரகதலிங்கத்தைக்களவாடி போக இரண்டு முரடர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக காட்டுப்பாதையில் ஓடுகிறவள் ஒற்றையடி பாதையின் முடிவில் இருக்கும் அருவிக்குள் குதிக்கிறாள் குதித்த இடத்தில் ஒரு குகை இருக்கிறது... முரடர்களும் அருவிக்குள் குதித்து... செங்குருவியை.. நெருங்கி விட வேறு வழி என்று குகைக்கும் ஓடுகிறாள்... அங்கே.. கொடிய மந்திரவாதி காத்திருக்கிறான்... ஒரு பக்கம் முரடர்கள்... இன்னொரு பக்கம் கொடிய மந்திரவாதி... நடுவில் சிக்கிக் கொள்ளும் செங்குருவி.... கையில் இருக்கும் மரகதலிங்கம்.... செங்குருவியின் கதி என்ன ஆனது? செங்குருவி தப்பித்தாளா? கொடியவர்களின் கதி என்ன? படித்து பாருங்கள் பச்சை சிவன் காடு.. நாவலை...

Egileari buruz

தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.

இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.

குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.

வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.

மிக்க அன்புடன்
மகேஷ்வரன்

Baloratu liburu elektroniko hau

Eman iezaguzu iritzia.

Irakurtzeko informazioa

Telefono adimendunak eta tabletak
Instalatu Android eta iPad/iPhone gailuetarako Google Play Liburuak aplikazioa. Zure kontuarekin automatikoki sinkronizatzen da, eta konexioarekin nahiz gabe irakurri ahal izango dituzu liburuak, edonon zaudela ere.
Ordenagailu eramangarriak eta mahaigainekoak
Google Play-n erositako audio-liburuak entzuteko aukera ematen du ordenagailuko web-arakatzailearen bidez.
Irakurgailu elektronikoak eta bestelako gailuak
Tinta elektronikoa duten gailuetan (adibidez, Kobo-ko irakurgailu elektronikoak) liburuak irakurtzeko, fitxategi bat deskargatu beharko duzu, eta hura gailura transferitu. Jarraitu laguntza-zentroko argibide xehatuei fitxategiak irakurgailu elektroniko bateragarrietara transferitzeko.