கவி. செங்குட்டுவன் என்கிற புனைப் பெயரில் எழுதி வரும் திரு. செ. இராஜேந்திரன் என்பவர் அரசு நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக தற்போது பணியாற்றி வருகிறார். கல்வித்துறையில் 36 ஆண்டுகள் அனுபவம். பெற்றவர். தமிழக அரசின் உயரிய விருதான டாக்டர். இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர். இவர் கவிதை, கட்டுரை, சிறுகத்சி, நாடகம், ஆய்வுக் கடுரைகள் எழுதுதல் உள்ளிட்ட பன்முகத்திறமை கொண்டவர். தற்போது பட்டினித் தடாகத்து பாசமலர்கள், வேரில் பழுத்த பலா ஆகிய கவிதை நூல்களையும், ஐம்பெரும் காப்பியங்கள் வினா - விடை விளக்கம் எனும் நூலையும் வெளியிட்டுள்ளார். பட்டிமன்றம், கவியரங்கம், தமிழ் கணினி பயிலரங்கங்கள், என நூற்றுக்கும் மேற்பட்ட மேடைகளைக் கண்டவர்.