இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரரான விக்ரம், தன் விடாமுயற்சியின் பலனை, தன் காதல் மனைவியான ரசிகாவுடன் இன்பமான அனுபவித்து வருகிறான். இவனுடய புகழின் உச்சியை சரித்துவிட எண்ணி, பல்வேறு சூழ்ச்சிகள் நடைபெறுகின்றன. செய்யாத குற்றத்திற்காக சிறைவாசம் பெறுகின்றான். இவனை காப்பாற்றுவதற்காக பரத் தன்னுடைய வக்கீல் மூளையை குடைந்துக் கொள்ள, உதவிக்கு சுசிலா வர, இருவரும் சேர்ந்து செயல்பட்டு, விக்ரமிற்கு எதிராக பின்னப்பட்ட சூழ்ச்சி வலைகளை, தங்கள் சாமர்த்தியத்தால்.. கிழித்தெரிய பரத் எடுக்கும் முயற்சிகள் என்ன? விக்ரம் விடுவிக்கப்பட்டானா? சுவாரசியமான கதைக்களத்தை வாசித்து தெரிந்துக் கொள்வோமா?