செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் ஒன்றியத்தில் கயப்பாக்கம் என்ற கிராமம் சொந்த ஊர் தந்தை நாகசுர வித்துவான் வெ. இராமசாமி, தாய் சரசு தனது ஆரம்ப பள்ளி படிப்பை கயப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், அச்சிறுப்பாக்கம் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரையும், செங்கல்பட்டு இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரியில் பி. ஏ. (வரலாற்று) துறையில் பட்டமும், சென்னை மாநிலக் கல்லூரியில் எம். ஏ. (வரலாற்றில்) பட்டமும், எம்ஃபில் (வரலாற்று) ஆய்வாளர் பட்டமும், இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகம் புது டில்லியில் பி.எட் பட்டமும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் இளநிலை ஆங்கிலத்தில் பி ஏ பட்டமும், முதுகலை ஆங்கிலத்தில் எம் ஏ பட்டமும் முடித்துள்ளார்.
இவரது முதல் படைப்பான சோற்றுக்காக நடந்தோம்” என்ற புதுக் கவிதை நூல், கவிதை உறவு என்ற இலக்கிய இதழின் ஆசிரியரான ஏர்வாடி எஸ் -இராதாகிருஷ்ணன் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2022 ஆம் ஆண்டுக்கான புதுக்கவிதை நூலுக்கான முதல் பரிசினை பெற்றுள்ளது.