Rusitha Unavum Rasitha Unarvum

· Pustaka Digital Media
5,0
2 anmeldelser
E-bog
157
Sider
Bedømmelser og anmeldelser verificeres ikke  Få flere oplysninger

Om denne e-bog

உணவும், ரசனையும், அதன் மூலம் கிடைக்கும் உணர்வும், நம் வாழ்க்கையில் பிரிக்க முடியாதபடி, பின்னிப் பிணைந்தவை. வயிற்றின் மூலமாக இதயத்தை அடைவது என்று ஒரு, சொல் வழக்கு உள்ளது. ஒவ்வொருவருக்கும், உணவு சம்பந்தப்பட்ட ஒரு நினைவு, ஆழ்மனதில் பதுங்கி கிடக்கிறது. அது, ஏற்படுத்துகின்ற, சிலிர்ப்பு, சம்பந்தப்பட்ட மனிதர்களையும், உணவை ருசிக்கும் பொழுது ஏற்படுத்திய இனிய நறுமணம் வீசுகின்ற, நாவின் சுவை நரம்புகளை சுண்டி இழுக்கின்ற, எண்ணங்களை, ஒவ்வொருவருக்கும் தந்து கொண்டே இருக்கிறது. இந்தியா, எண்ணற்ற, மொழிகளையும் கலாச்சாரங்களையும், தருவது போல், உலகிற்கே முன்னோடியாக, தனித்துவம் மிக்க, உணவு பதார்த்தங்களை, வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. தன்னுடைய, அலுவல், மற்றும், தனிப்பட்ட பயணங்களில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் நகரங்கள் இவைகளுக்கு சென்று தனக்கு கிடைத்த அனுபவங்களை, உண்டு மகிழ்ந்த உணவு வகைகளை, அந்த உணர்வுகளை நமக்கு வாரி வழங்குகிறார், ஆசிரியர். இந்த புத்தகத்தில் உள்ள, 25 கட்டுரைகளும், பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மனிதர்கள், இடங்கள், போன்றவற்றிற்கு நம்மை கூட்டிச் சென்று, அதை நாமும் சுவைக்க வேண்டும் ரசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டிவிடுகிறார். கட்டுரையின் தலைப்புகள் புதுமையாக உள்ளன. ஆசிரியரின் ஆர்வத்துடன் கூடிய, ரசிக்கும் உணர்வு பாராட்டுதலுக்குரியது.

Bedømmelser og anmeldelser

5,0
2 anmeldelser

Om forfatteren

திருச்சிராப்பள்ளியில் பிறந்து, காவிரி பாயும் அந்த மாவட்டத்தின் நதிக்கரை ஊர்களில், பள்ளி படிப்பை முடித்து, St Josephs College (மேதகு அப்துல் கலாம், எழுத்தாளர் சுஜாதா போன்றவர்கள் படித்த கல்லூரியில்) இயற்பியல் பட்டம் பெற்று பாரத ஸ்டேட் வங்கியில் பணியில் சேர்ந்தவர், கிரிவாசன். 40 வருடங்கள், வடகிழக்கு இந்திய மாகாணங்கள் உட்பட, பல்வேறு இடங்களில் பணியாற்றி, தற்போது, சென்னை மயிலாப்பூரில் வசித்து வருகிறார். வங்கிப் பணியில், பயிற்சி, மேம்பாடு, மற்றும் மனித இயல் மேலாண்மை, டிஜிட்டல் தொழில்நுட்பம், தனிநபர் நிதி திட்டமிடல் போன்றவைகளில் நல்ல அனுபவம் பெற்றவர். இசை, தமிழ் இலக்கியம், நடிப்பு, நாடகத்துறை, சொற்பொழிவு, இயற்கை மற்றும் இந்திய கலாச்சாரம் சார்ந்த சுற்றுலா, இந்திய பாரம்பரிய உணவு வகைகள், நகைச்சுவை, சினிமா என்று பல்வேறு ரசனைகளில், தன்னை ஈடுபடுத்தி, அனுபவங்களை சேகரிப்பவர். நண்பர்கள், மற்றும் நலம் விரும்பிகளின் ஊக்குவித்தலின் காரணமாக, தனக்கு கிடைத்த அனுபவங்களை, சுவைபட, மயிலை கிரிவாசன் என்ற பெயரில், சமூக ஊடகங்களிலும், டிஜிட்டல் மீடியாவிலும் எழுதி வருபவர்.

Bedøm denne e-bog

Fortæl os, hvad du mener.

Oplysninger om læsning

Smartphones og tablets
Installer appen Google Play Bøger til Android og iPad/iPhone. Den synkroniserer automatisk med din konto og giver dig mulighed for at læse online eller offline, uanset hvor du er.
Bærbare og stationære computere
Du kan høre lydbøger, du har købt i Google Play via browseren på din computer.
e-læsere og andre enheder
Hvis du vil læse på e-ink-enheder som f.eks. Kobo-e-læsere, skal du downloade en fil og overføre den til din enhed. Følg den detaljerede vejledning i Hjælp for at overføre filerne til understøttede e-læsere.