திருச்சிராப்பள்ளியில் பிறந்து, காவிரி பாயும் அந்த மாவட்டத்தின் நதிக்கரை ஊர்களில், பள்ளி படிப்பை முடித்து, St Josephs College (மேதகு அப்துல் கலாம், எழுத்தாளர் சுஜாதா போன்றவர்கள் படித்த கல்லூரியில்) இயற்பியல் பட்டம் பெற்று பாரத ஸ்டேட் வங்கியில் பணியில் சேர்ந்தவர், கிரிவாசன். 40 வருடங்கள், வடகிழக்கு இந்திய மாகாணங்கள் உட்பட, பல்வேறு இடங்களில் பணியாற்றி, தற்போது, சென்னை மயிலாப்பூரில் வசித்து வருகிறார். வங்கிப் பணியில், பயிற்சி, மேம்பாடு, மற்றும் மனித இயல் மேலாண்மை, டிஜிட்டல் தொழில்நுட்பம், தனிநபர் நிதி திட்டமிடல் போன்றவைகளில் நல்ல அனுபவம் பெற்றவர். இசை, தமிழ் இலக்கியம், நடிப்பு, நாடகத்துறை, சொற்பொழிவு, இயற்கை மற்றும் இந்திய கலாச்சாரம் சார்ந்த சுற்றுலா, இந்திய பாரம்பரிய உணவு வகைகள், நகைச்சுவை, சினிமா என்று பல்வேறு ரசனைகளில், தன்னை ஈடுபடுத்தி, அனுபவங்களை சேகரிப்பவர். நண்பர்கள், மற்றும் நலம் விரும்பிகளின் ஊக்குவித்தலின் காரணமாக, தனக்கு கிடைத்த அனுபவங்களை, சுவைபட, மயிலை கிரிவாசன் என்ற பெயரில், சமூக ஊடகங்களிலும், டிஜிட்டல் மீடியாவிலும் எழுதி வருபவர்.