அந்த சக்தி, மனம் என்னும் மஹா சக்திதான் என்றும், மெய்ஞான வெற்றிக்கு மட்டுமின்றி உலகியலுக்கும், தனிமனித வெற்றிக்கும் அது ஒன்றே தான் காரணம் என்றும் அடையாளம் கண்டுக் கொள்ள முடியாமல் போய்விட்டது.
இந்த மனம் என்னும் சக்தி ஒன்றேதான் மெய்ஞான வெற்றியானாலும், உலகியல் வெற்றியானாலும் அவரவர்களின் இலக்குகளை அடைய, தன் விதியை படைக்க உதவுகிறது என்பதை ஸ்வாமி விவேகானந்தர் அவர்கள், “உங்கள் விதியைப் படைத்தது நீங்களே என்பதை அறியுங்கள். உங்களுக்கு வேண்டிய முழு பலமும் முழுத் துணையும் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன. ஆதலால் வருங்கால வாழ்க்கையை உங்கள் விருப்பப்படி அமைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிய அறிவுரையின் வாயிலாக அறிவித்துக் கொள்கிறோம். ஆகவே எல்லோரும் தங்கள் வாழ்க்கையில் வெற்றிப் பெற வேண்டுமென்றால் இந்த மனச்சக்தியை இயக்க முறையான, சுலபமான வழியைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த வழிமுறையைத்தான், ஏற்ற வகையில் எளிமைப்படுத்தி இங்கு தரப்பட்டிருக்கிறது. இந்த வழிமுறைகளைப் பின்பற்றி தங்கள் வழிகளில் வெற்றிப் பெற்றவர்களின் அனுபவங்கள் இதில் குறிப்பிடப் பட்டுள்ளன. இந்த வழிமுறைகளை நீங்களும் கற்றுப் பழகி, நீங்கள் விரும்புவதை அடைய வேண்டும் என்ற என் ஒரே விருப்பம்தான், இந்த மின் புத்தக வடிவில் உங்கள் கைகளில் தவழ்கின்றன. இதை யூடியூபிலும் டிஜிட்டல் முறையிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Manam Ennum Mahashakti is a powerful Tamil story book that blends engaging narratives with deep life lessons, making it a perfect motivational book for those seeking wisdom and self-growth.
This inspired book weaves together relatable tales and profound insights, encouraging readers to reflect, persevere, and embrace inner strength. Whether you need daily motivation or meaningful guidance, its stories resonate with universal truths while staying rooted in Tamil storytelling traditions.
A treasure trove of empowerment, Manam Ennum Mahashakti is more than just a read—it’s a transformative experience.