உங்களுக்கு தெரியுமா! எட்டாம் நூற்றாண்டில் மெரினா பேச் கிடையாது. கடல் அலைகள் மோதும் இடத்தில இருந்த ஆலயங்கள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் மற்றும், மயிலை கபாலீஸ்வரர் கோவில். கரடுமுரடாக பாறைகள் மட்டுமே இருந்த கறைகள். நிறைய மரங்கள், வந்துதித்த வெண்திரைகள், செம்பவள வெண்முத்தம் அந்தி விளக்கும், மணிவிளக்காம் - என்று சூரிய அஸ்தமன திருவல்லிகேணியை பேயாழ்வார் பாடி இருக்கிறார்.
பதினாறாம் நூற்றாண்டில் தான் முதன்முதலாக கடற்கரையை உருவாக்கும் திட்டம் ஏற்பட்டது. மணற்பரப்பு அப்போது இல்லை. செயின்ட் கீர்ஜ் கோட்டையே 1640 ல் தான் கட்டப்பட்டது என்கிற போது, சிறிய மீன்பிடி துறையாக இருந்த சென்னை துறைமுகம் 1870 ல் தான் கட்டப்பட்டபோது என்கிறபோது, மெரினா எப்போது உருவாகி இருக்கும். ஹார்பர் உருவானபோதுதான் ஒரு கடற்கரையை உருவாக்கினால் என்ன என்று யோசனை தூண்டியது.
ஹார்பர் கட்டுவதற்காக கொண்டு வந்த மண்ணை கொண்டு, கடாரகரையும் உருவாக்கப்பட்டது. அதன்மூலம் நிலப்பரப்புக்கு, காலுக்கும் இடையே பெரிய இடைவெளி உருவாக்கப்பட்டது. இந்த அப்பணியை செய்தவர் சர் மவுண்ட் ஸ்டூவர்ட் எலிபின்ஸ்டன் (இவர் பெயரில்தான் மவுண்ட் ரோடு எல்பின்ஸ்டன், தியேட்டர், அண்ணா சிலை எதிரே இயங்கியது. துறைமுகத்தை கட்டுவதற்காக, 1870 ல் சென்னை வந்த எல்பின்ஸ்டன் கடற்கரை அழகில் மயங்கினார். 1881 ல் மீண்டும் சென்னையின் கவர்னர் ஜெனரலாக இலண்டனில் இருந்து வந்தபோது, சென்னை மெரினா கடற்கரை மண் பரப்பை உருவாக்கினார்.
அதற்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்து, இத்தாலிய, ஸ்பானிஷ் மற்றும் போர்ச்சுகல் மொழிக்கு பொதுவான மெரினா என்கிற பெயரை தேர்ந்தெடுத்தார். இத்தாலிய மற்றும் போர்ச்சுகீய மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில், மெரினா என்னும் சொல்லுக்கு ஹார்பர் அல்லது படகுகளும், ஓடங்களும் நிறைந்த ஒரு துறைமுகம் என்று பொருள்.
உலகத்திலேயே இரண்டாவது பெரிய கடற்கரையாக திகழ்கிறது மெரினா பீச்.
தமிழகத்தின் அணிகலன்களில் தலையாம் சென்னையில் ஜொலிக்கும் வைரக்கல் மெரினா பீச். கடற்கரையின் முழு ஹீரோ நமது வங்காள விரிகுடா என்னும் பெ ஆப் பெங்கால் தான். நமது கண்ணுக்கு, ரம்யமாக, மனதுக்கு இதத்தை தரும், மாலை வேளைகளில் நமது உற்ற துணைவனாக விளங்கும், வங்காள விரிகுடாவின் உண்மை முகம் தெரியுமா?
பார்க்கத்தான் சாது ! கோபம் வந்தால் காடு கொள்ளாது! 2004 சுனாமியின் போது அதன் கோபத்தை, வெறியாட்டத்தை பார்த்தோம். அதற்கு முன்பாக கூட பல சமயங்களில் வங்காள விரிகுடாவுக்கு கோபம் வந்திருக்கிறது.
ஒரு சமயம், ஒரே சமயத்தில், இரண்டு புயல்கள் சென்னையை தாக்கின. அப்போது வங்காள விரிகுடாவின் கோபம் எல்லை மீறியது.
வாருங்களேன் ! நமது வங்காள விரிகுடாவை கோபதாபங்களை பற்றி தெரிந்து கொள்வோம்!
முகநூல் தொடராக வந்த எனது தொடரை நூலாக வெளியிடும் புஸ்தகாவுக்கு எனது நன்றிகள். வாசகர்களுக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள்!
டி ஏ நரசிம்மன் என்கிற காலச்சக்கரம் நரசிம்மா கடந்த முப்பத்தி ஐந்து வருடங்களாக பத்திரிக்கையாளராக திகழ்கிறார். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் தனது பணியை துவக்கியவர் தற்போது . தி ஹிந்து ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருக்கிறார். சுமார் 15 நாவல்களை எழுதி இருக்கும் இவரது முதல் நாவல் காலச்சக்கரம், வெளியிடப்பட்டு பரபரப்பாக விற்பனையாக, இவரது பெயர் காலச்சக்கரம் நரசிம்மாவாக மாறியது. இவரது ரங்கராட்டினம் நாவலை படித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரை அழைத்து பேசி பாராட்டி, திருவரங்கத்தில் போட்டியிட போவதாக அறிவித்தார். சங்கதாரா , பஞ்ச நாராயண கோட்டம், கர்ணபரம்பரை, குபேரவன காவல், அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா போன்ற இவரது நாவல்கள் இவருக்கு தனி வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளன. தற்போது இவர் எழுதியுள்ள ஐந்து பாகங்களை கொண்ட அத்திமலைத்தேவன் பெரும் பரபரப்புடன் விற்பனையாகி கொண்டிருக்கிறது.
சின்ன திரைகளில் கிருஷ்ணா காட்டேஜ், அபிராமி, அனிதா வனிதா, மாயா போன்ற தொடர்கள் உள்பட பல தொடர்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு சிறப்பு அரசியல் விமர்சகராகவும் கட்டுரைகள் எழுதி உள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை வசனகர்த்தா சித்ராலயா கோபு, மற்றும் எழுத்தாளர் கமலா சடகோபனின் மகன் ஆவார். இவரது மகன் ஷ்யாம் திருமலை என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் துணை மற்றும் இணை இயக்குனராகவும், மகள் ஸ்ரீயந்தா இயக்குனர் ராதாமோகனின் காற்றின் மொழி மற்றும் பொம்மை படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளனர்.
குமுதத்தில் தற்போது மூவிடத்து வானரதம் என்கிற சரித்திர தொடர்கதையை எழுதி வருகிறார்.
காலச்சக்கரம் நரசிம்மா அவர்களை [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்