சாதி ஒன்று தான் அது தான் மனிதம்! மனிதத்தில் புனிதம் புலப்படவில்லையெனில் புல்லாய் கூட நீ இப்புவியில் பிறக்க அருகதையற்றவன் ஆவாய்! அதில் எள்ளளவு கூட சந்தேகமில்லை! தவறாய் தெரிந்தால் மன்னிக்க வேண்டாம் முடிந்தால் கூடிய சீக்கிரம் சீக்காளி இதயத்துடன் சிகிச்சை பலனின்றி மடிந்துவிடு! பூமிக்கு பாரம் நீ! நஞ்சை விளைவித்து நீ நாடகமாட வேண்டாம்! வீண் கதைகள் பேசி பாதகம் விளைவிக்காதே! காலன் கூட உனக்கு சாதகமாக துணை நிற்க மாட்டான்! கவனத்தில் வை!
சாதி ஒரு பீடை நோய் அது உன்னுள் உட்புகுந்தால் உன் எதிர்ப்பு சக்தி குறைந்து உயிர் இருக்கும் போதே ஊனமுற்று அலையப்படுவாய் அது உறுதி. அது ஒரு சாக்கடை வெற்று சாக்குபோக்குக்கூட நெருங்கிவிடாதே பொசுங்கிவிடுவாய்
நாலு எழுத்து படித்துவிட்டால் நீ நல்லவன் ஆகிவிடுவாயா? பூஜை புனஸ்காரம் செய்தால் நீ கடவுள் ஆகிவிடுவாயா?
இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான் அறியாமைக்கு கிடைத்த அரியாசனம்! படிப்பிற்கும் அறிவிற்கும் எவ்வித சம்பந்தமும். இல்லை
பெரியவர்களை மதிக்க வேண்டும் இது புகட்டப்பட்ட பொது அறிவு
பெரியவர்கள் தவறு செய்தால் புத்தி புகட்டி புரிய வைக்க வேண்டும் இது பகுத்தறிவு! உரிமைக்கு குரல் கொடுக்க நீ மேல் சாதி, கீழ் சாதி என்ற பாகுபாடு வேண்டியதில்லை. எவராலும் அசைக்க முடியாத தைரியம் ஒன்று வேண்டும். அது போதும் குணத்தால் கீழானாவரை சுட்டெரித்துவிடும் சக்தி அதற்கு உண்டு. உரிமைக்குரல் ஓங்கிதான் ஒலிக்கும்.
நீங்கள் ஆத்திகனாகவும் இருக்க வேண்டாம் நாத்திகனாகவும் இருக்க வேண்டாம் மனசாட்சிக்கு பயந்து நடக்கும் நல்ல மனிதனாக இருக்க முயற்சித்தாலே நீங்கள் கடவுளுக்கு சமமானவர்கள் தான் என்னை பொருத்த மட்டில்! சமூகத்தில் காணப்பாடும் கருப்பாடுகளே சாதி, சமத்துவமின்மை, முப்பால் இது எப்பால், ஆணாதிக்கம், பெண் வன்கொடுமை மேலும்பல. இப்புத்தகம் ஒட்டுமொத்த ஆன்மாக்களின் குமுறல், அவலத்தின் அலறல்.