இந்த காலத்திலும் பல சீதைகள் இருக்கின்றனர். அவர்கள் அக்னிப் பிரவேசம் செய்து தான் தங்களது பவித்திரத்தை நிலை நாட்ட வேண்டுமா?
கதாநாயகி மிதிலா... மூல நம்பிக்கையில் ஊறிப் போன மலைக் கிராமத்தில்... தனது புகுந்த வீட்டினர் மூலமாக அக்னி குழியில் இறங்கும்படி நிர்ப்பந்திக்கப் படுகிறாள்.
தன் மீது விழுந்த பழியை களங்கத்தை துடைப்பதற்காக அவள் அக்னிப் பிரவேசம் செய்தாளா? இல்லையா? அவள் எடுத்த முடிவு சரி தானா? பிரவல மாத இதழில் வெளியான இக்கதைக்கு கிடைத்த பலத்த வரவேற்பு... என்னை அடுத்த பாகத்தை எழுத வைத்தது...
டாக்டர் மிதிலாவின் சாதனைகளை விரிவாய் எழுதியுள்ளேன்... முடிவு அனைத்து வாசகர்களின் மனதை அள்ளும்.