இத்தகைய புகழ் பெற்ற ‘ஸ்டார் சமையல் நிகழ்ச்சி’ இப்போது வண்ணமயமான நூல் வடிவில் உங்கள் கையில். திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தங்களுக்குப் பிடித்த ஒரு சைவ சமையலை எடுத்துக் கொண்டு அதை செய்வது எப்படி என்பதை இந்நூலில் விளக்கியிருக்கிறார்கள்.
படிக்கவே சுவையாக இருக்கும். இதிலுள்ள சமையல் வகைகளை சமைத்துப் பார்த்தால் அதைவிட இன்னும் அதிக சுவையாக இருக்கும்.
சென்னை பல்கலைக்கழகத்தின் பாரதி மகளிர் கல்லூரியில் B.Com பட்டப்படிப்பை முடித்த திருமதி. விஜயலட்சுமி ரமேஷ், ஆனந்த விகடன் அலுவலகத்தில் ஆசிரியர் குழுவின் செயலராக பணியாற்றியவர். பிறகு, தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றதோடு, ‘சன் டிவி’ மற்றும் ‘கலைஞர் டிவி’ ஆகிய சேனல்களில் புகழ்பெற்ற ‘சக்தி மசாலா சமையல்’ நிகழ்ச்சியை தொடர்ந்து 1000 வாரங்கள் இயக்கிய ஒரே இந்திய இயக்குநர் என்கிற பெருமை திருமதி. விஜயலட்சுமி ரமேஷ் அவர்களுக்கு உண்டு.
அவர் தொலைக்காட்சியில் 20 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கி வந்த, அந்த புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சியின் சுவையான பல்வேறு பகுதிகளை இப்போது நீங்கள் மின்னூல் வடிவமாக படிக்கும் வாய்ப்பைப் பெற்று இருக்கிறீர்கள்.