திருமதி. அனுராதா அவர்கள் தான் கண்டு, கேட்டு, சிந்தித்து அறிந்த யாவற்றையும் சுருங்கச் சொல்லி விளக்கும் ஹைக்கூ வடிவில் தந்திருப்பது படிக்க மிகவும் அருமையாக உள்ளது.
அனுராதா சௌரிராஜனாகிய நான் தனியார் வங்கியில் பணிபுரிந்து, ஓய்வு பெற்று,தமிழின் மேல் உள்ள காதலாலும், சமூகப் பொறுப்புணர்வுகளாலும் உந்தப் பட்டு எழுதுவதை என் முழு நேர விருப்பமாக்கிக் கொண்டேன். தற்சமயம் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன்! என் எழுத்துக்களை உள்வாங்கி வாசிப்பவரின் மேலான விமர்சனங்களே என்றும் என் பேனாவின் தீராத மை.