எல்லையற்ற பிரபஞ்ச சக்தி ஒன்றுதான். அதுதான் ஒவ்வொரு இடங்களில் ஒவ்வொரு பெயருடன் விளங்குகிறது. அதன் ஈர்ப்பு சக்தி ஒவ்வொரு தலங்களில் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. எல்லா உயிர்களிலும் அந்த சக்திதான் இருக்கிறது என்று புரியும்போது, நம்மால் யாரையும் வெறுக்கவோ, தீங்கு செய்யவோ முடியாது. அன்பு என்ற ஒரே சக்திதான் இந்த பிரபஞ்சம் முழுக்கப் பரவி இருக்கிறது என்பது புரிந்து விடும். அதை உணர்த்துவதுதான் இந்தத் தலங்கள்.