அவளின் ஒவ்வொரு பாடல்களும் சிறப்பான பலன்களைத் தரக் கூடியது என்றாலும் நம் இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான சில விஷயங்களுக்கான பாடல்களை இதில் தொகுத்துத் தந்திருக்கிறேன். இதைப் பாராயணம் செய்வதன் மூலம் நிச்சயம் அவளின் கருணை கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நாம் அழைக்க வேண்டும் என்பது இல்லை. அம்மா என்றால் எங்கிருந்தாலும் ஓடி வந்து விடுவாள். நம்பிக்கையோடு, பொறுமையோடு அவள் வருவாள் என்று காத்திருப்பதுதான் முக்கியம். நம் நம்பிக்கை, பொறுமையில் அவள் இருக்கிறாள். இதைக் குறிக்கும் இருபது பாடல்களை மட்டும் அவள் கருணையால் தொகுத்துத் தந்திருக்கிறேன். நீங்கள் அனைவரும் இவைகளைப் படித்து அம்பிகையின் கருணையைப் பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.