மஞ்சரி வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் பெண். விளம்பர நிறுவனம் தொடங்கும் அவள் தீவிர கிருஷ்ண பக்தை. குருஜி, மதுசூதனன், நாராயணி என்ற மூன்று பேர் அவளுக்குத் துணை. நாராயணி ஒரு யட்சிணி. கிருஷ்ணனே மது சுதனன். மஞ்சரி விரும்பும் முகுந்தன் மேல் ஒரு துஷ்ட சக்தி ஏவி விடப் பட்டு, அவன் கோமாவுக்குப் போகிறான். மஞ்சரி விளம்பர நிறுவனம் தொடங்கினாளா? முகுந்தன் உயிர் பிழைத்தானா,துஷ்ட சக்தியை ஏவியது யார்? என்பதைக் கூறுகிறது கிருஷ்ன கானம்.