அவர்களின் வேதனை, அடிமைத்தனம், குழிக்குள்ளிருந்து எழுந்து வரத் துடிக்கும் ஆவேசம், கருணை, வீரம் என்று அதை மட்டுமே மையப் படுதியுள்ளேன்.
இது முழுக்க மகாபாரதம் கிடையாது. பாட்டி சொல்லியது, கிராமப்புறங்களில் கேட்டதில் குழந்தைகளுக்கு தேவையானதை மட்டும் எடுத்துக் கூறினேன்.தேவைப்படும் இடங்களில் என் கற்பனையும் உண்டு.ஆனால் எந்த இடத்திலும் மூலக்கதையை மீறவில்லை.
படித்துப் பாருங்கள். இதன் ஒரே நோக்கம் வருங்கால சமூதாயம் சிறப்பாக அமைய ஒரு ஆசிரியராக என் பங்களிப்பை அளிப்பதுதான்.