என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப வாழ்ந்து காட்டியிருக்கிறார் உழைப்பால் உயர்ந்த உத்தமர் திருப்பதிராஜா அவர்கள் நேர்மை, உழைப்பு, விடாமுயற்சி, வைராக்கியம்... இந்த நான்கு மூலதனங்களும் ஒருவரை உயர்த்துமா? உயர்த்தும் என்பது தான்... திருப்பதிராஜாவின் வாழ்க்கை!
தமது விடாமுயற்சியால் விதியைத் தோற்கடித்து ஜெயித்தவர் ராஜா என்றால்... அது மிகையல்ல......! நூற்றுக்கு மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகளையும், எண்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், பல நாவல்களையும் நான் எழுதியிருக்கிறேன். உணர்வுப் பூர்வமான கதைகளையும், கனமான கதாபாத்திரங்களையும் படைத்தவள் தான்...! ஆனால் ஐயாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் போது பல கட்டங்களில் என் கண்கள் குளமாகின. மனம் பாறாங்கல்லாய் கனத்துப் போனது நிஜம்! இதையெல்லாம் தாண்டி ஒரு தனி திருப்தியும், மனநிறைவும், பெருமிதமும் என்னுள் முகிழ்த்தன என்பது உண்மை...! மரிக்கொழுந்தை தொட்ட கைகளில்... மணம் கமழத் தானே செய்யும்? ஐயாவோடு நானும் அலைந்து, திரிந்து, கஷ்டப்பட்டு கண்கலங்கி நெகிழ்ந்து நெக்குருகிப் போனதைப் போன்ற... ஒரு அனுபவம் ஏற்பட்டது. அந்த அளவுக்கு ஒன்றிப்போய்விட்டேன்.