மங்கையர் மலரைப் பார்த்து, விதவிதமாகச் சமைப்பார். நானும் என்னுடைய ஏழாவது வயதிலிருந்தே மங்கையர் மலரைப் படித்து வருகிறேன்... அதில் வரும் டிப்ஸ்களையும் சமையல் குறிப்புகளையும் படித்து, உடனே செய்து பார்ப்பேன். அதைச் சாப்பிட்டு விட்டு அனைவரும் பாராட்டுவார்கள். அப்படியே, ஆர்வம் அதிகமாகி, சமையல் துறையையே என்னுடைய தொழிலாகவும் அமைத்துக் கொண்டேன்.
கல்கி உலகத்தமிழர்களிடையே நன்கு அறியப்பட்ட தமிழ் வார இதழாகும். இது முதன் முதலில் எழுத்தாளர் கல்கி கி. கிருஷ்ணமூர்த்தியால் 1941-இல் ஆரம்பிக்கப்பட்டது. அவருக்குப் பின்னர் டி. சதாசிவம், கல்கியின் புதல்வர் கி. ராஜேந்திரன், புதல்வி சீதா ரவி ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர். தற்போது ஆசிரியராக இருப்பவர் கல்கியின் பேத்தி லஷ்மி நடராஜன் ஆவார்.