இடுக்கி எஸ்டேட் ஜமீன் வம்சத்திலிருந்து சுரபியை பெண் கேட்டு வருகிறார்கள்.
இளைய ஜமீன்தாரர் சுரேந்தருக்கு மாலையிட்டு மனைவியாகிறாள். மனம் பூரிக்கும் சுரபிக்கு மொட்டை கடிதம் கிடைக்கிறது. 'இடுக்கி எஸ்டேட்டில் ஏராளமான இளம் பெண்களை நாசம் செய்து கொலை செய்தவன் சுரேந்தர்' என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குழப்பத்தில் சிக்கி தவிக்கிறாள் சுரபி. கண் நிறைந்த கணவன் ஒரு கொலைகாரானா? குழம்புகிறாள்.
எஸ்டேட் பங்களாவில் கன்னி மூலையில் குழி தோண்டும் போது இளம் பெண்ணின் பிணம் கிடைக்கிறது. அத்தனை பாதகங்களையும் செய்தது யார்? சுரபியின் வாழ்வில் வசந்தம் மலர்ந்ததா? வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்...