கம்பன் பிறந்த தேரழுந்தூரைச் சொந்த ஊராகக் கொண்ட ஆமருவி தேவநாதன், சிங்கப்பூரில் வங்கித்துறையில் மென்பொருள் கட்டமைப்பாளராகப் பணியாற்றுகிறார். 'ஆ.. பக்கங்கள்' (www.amaruvi.in) என்னும் வலைத்தளத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகிறார். தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்களிலும் தமிழகக் கோவில் வரலாறுகளிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ள ஆமருவி, 'பழைய கணக்கு' என்னும் தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பும், 'Monday is not Tuesday' என்னும் ஆங்கில மின் நூலும் வெளியிட்டுள்ளார். 'பழைய கணக்கு' தொகுப்பில் வந்த 'ஸார் வீட்டுக்குப் போகணும்' சிறுகதை இந்திய மனிதவள அமைச்சின் தேசிய புத்தக நிறுவனத்தின் 'சிறந்த 25 சிறுகதைகள்' வரிசையில் இடம்பெற்றது. 'நான் இராமானுசன்' இவரது மூன்றாவது நூல்.