அதே ஒன்பது வயதில் அவள் மகளுக்கும் அவள் திருச்சியில் சந்தித்த அதே ஆபத்து வருகிறது ஆனால் தற்காப்பு கலை தெரிந்த அவள் மகள் அதை சமாளித்து அவனை போலீசில் பிடித்துக் கொடுக்கிறாள்.தாய் மனம் நிம்மதியுறுகிறது.
"வள்ளி சுப்பையா" என்ற பெயரில் முகநூலில் எழுதி வரும் தி. வள்ளி சிறந்த சிறுகதை எழுத்தாளர். 150க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், குறுந்தொடர்கள், நெடுந்தொடர்கள் எழுதியுள்ளார். மின்னிதழிலும் அச்சு இதழிலும் எழுதி வருகிறார். மனதுக்கு நெருக்கமான எளிய நடைக்கு சொந்தக்காரர்.
ஆசிரியரின் பிற வெளியீடுகள்...
1) "நினைவுச் சிறகுகள்" (இவர் கணவருடைய மருத்துவ அனுபவங்களின் பகிர்தல்.)
2)"நிழல் அல்ல நிஜம்.." யதார்த்த வாழ்வியல் சிறுகதைகளின் தொகுப்பு
3) "சுந்தர பவனம்" 100 அத்தியாயங்களைக் கொண்ட 5 தலைமுறைகளை அலசும் நாவல்..