தமிழ் நாடு அரசு நடத்திய உலகத்தமிழர் நாளில் தமிழக அரசின் உலகத் தமிழர்களின் வரலாறும் வாழ்வியலும்" என்ற புத்தகத்தில் இவருடைய கட்டுரை வெளிவந்து இருக்கிறது. இவர் தன் மூன்று நண்பர்களுடன் (ரகுநாதன், விஜி சிவா மற்றும் ருக்மணி வெங்கட்ராமன்) பத்து மாதமாக தமிழ் நெஞ்சம் என்ற இதழில் தொடர்ந்து வருவதை இவர் சாதனையாக நினைக்கிறார். தற்போது பேர்கி டெர்ம் குழுவினர் மூலம் "சுட்டும் விழிச் சுடரே என்ற தலைப்பில் இரண்டு கதைகளும் ஆத்திச்சூடி கதைகள் இரண்டும் எழுதி இருக்கிறார். மறந்து போன கடிதம் எழுதும் பழக்கத்தை திரும்ப கொண்டு வந்து இப்படிக்கு" என்ற புத்தகத்தில் கதை எழுதி இருக்கிறார். சமீபத்தில் கொலுசு என்ற இதழில் இவர் எழுதிய "நான்கும் பெண்ணா" என்ற தலைப்பில் வந்த ஒரு கதை.
சிறப்புப் பரிசு பெற்று இருக்கிறது. மேலும் காவிய நாயகிகள் கவின் கலைகள், பர்பிள் ஹீரோஸ், கதம்பவனம் என்ற புத்தகங்களில் இவர எழுதிய கதைகள் வெளிவந்து இருக்கிறது 'ராமாமிர்தம்" என்ற தலைப்பில் ராம பக்த ஆஞ்சநேயர் ராமர, சீதாதேவி மூவரும் உடையாடுவதைப் பற்றி எழுதியதைத் தன் மிகச் சிறந்த புத்தகமாகக் கருதுகிறார்.
மேன் மேலும் கதைகள் எழுதுவதை வயதான காலத்தில் பகவான அருள் தான் காரணம் என்று நினைக்கும் இவர்,தன் கணவர் திரு முத்துக் கிருஷ்ணன் அவர்களுக்கு சமீபத்தில் நடந்த ருதர ஏகாதசி அன்று வாழையடி வாழை என்ற தலைப்பில் இவர் கதைகளைத் தொகுத்து உமா அபர்ணா பரிசு அளித்த புத்தகமும், அதில் இவர் மருமகள் லீனா கிரிதர் மற்றும் அவர் தோழி ரூபா ராம் வரைந்த அட்டைப்பட ஓவியமும் வெளி வந்தவதத் தன் மிகப் பெரிய பரிசாக கருதுகிறார். ஓவியம் பாடல்கள் இவருக்குப் பிடித்தமான ஒன்று.
இந்த நூலின் ஆசிரியர் உமா அபர்ணா pachydermtales-ன் துணை நிறுவனர். ஆம்பல் எனும்தமிழ் பிரிவின் தலைவர். கிட்டதட்ட 400 புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இவரது முதல் புத்தகம் கண்ணாடி விற்பனையில் இரண்டாம் இடத்தை பிடித்தது. தமிழ்நாடு விமன்ஸ் அச்சீவர் அவார்ட்ஸ், தமிழ் இலக்கிய பெருவிழா முதலியவற்றை சிறந்த முறையில்நடத்தியுள்ளார். சிறந்த எழுத்தாளருக்கான பரிசுகளை வாங்கியுள்ளார். ஆருஷி, கிராம புறமாணவர்களின் எழுத்துகளை புத்தகம் ஆக்கல், வகுப்பெடுத்தல், மலைவாழ் மக்களின் நலனுக்கு உதவி செய்தல் வயதான பெண்களின் திறமைகளை வெளிக்கொணர்தல், சிறப்பு குழந்தைகளுக்கான மெய்நிகர் நிகழ்வு இவற்றை தம் குழுவுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார்.