இந்த நூலில் ஏழு எழுத்தாளர்கள் தங்கள் அனுபவங்களை கதைகளாக செதுக்கி உள்ளனர்.
கதையின் ஒவ்வொரு கதாநாயகியும் வல்லமை கொண்ட தாயாகவும், தோழியாகவும், தோல்வியைக் கண்டு துவளாமல் வெற்றியை நோக்கி பயணம் செய்பவளாகவும் நம் நெஞ்சில் நிறைகிறாள்.
பெண்கள் அடிமையானதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று கல்வி இல்லாமை மற்றது அச்சமும் நாணமும் மிகையாக இருந்தது. அவற்றை தகர்த்தெறிந்து உச்சத்தை தொட்ட மாந்தர்களை சுற்றிப் பின்னப்பட்ட கதைகள்.
"அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டிரோ!"
என்ற பாரதியின் எண்ணத்தை வண்ணமாக்கும் கதைமாந்தர்கள்.
'பெண்மையை போற்றுவோம்'
'வாழ்க இவ்வையகம்'
இந்த நூலின் ஆசிரியர் உமா அபர்ணா pachydermtales-ன் துணை நிறுவனர். ஆம்பல் எனும்தமிழ் பிரிவின் தலைவர். கிட்டதட்ட 400 புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இவரது முதல் புத்தகம் கண்ணாடி விற்பனையில் இரண்டாம் இடத்தை பிடித்தது. தமிழ்நாடு விமன்ஸ் அச்சீவர் அவார்ட்ஸ், தமிழ் இலக்கிய பெருவிழா முதலியவற்றை சிறந்த முறையில்நடத்தியுள்ளார். சிறந்த எழுத்தாளருக்கான பரிசுகளை வாங்கியுள்ளார். ஆருஷி, கிராம புறமாணவர்களின் எழுத்துகளை புத்தகம் ஆக்கல், வகுப்பெடுத்தல், மலைவாழ் மக்களின் நலனுக்கு உதவி செய்தல் வயதான பெண்களின் திறமைகளை வெளிக்கொணர்தல், சிறப்பு குழந்தைகளுக்கான மெய்நிகர் நிகழ்வு இவற்றை தம் குழுவுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார்.