வன ராணி .. சிற்றன்னை சதியால் குழந்தை இளவரசி நந்தினி தேவி காட்டில் வளர்கிறாள், முனிவர் மற்றும் காட்டு விலங்குகள் துணையுடன்.. அவள் தாய் மகாராணி இறந்துவிட தந்தை காராக்கிரகத்தில். காட்டில் வளரும் நந்தினி எப்படி சிற்றன்னையையும், அவள் மகனையும் வென்று, நாட்டையும் மன்னரையும் மீட்கிறாள் என்பதை சுவாரசியமான திருப்பங்களுடன் கூறும் கதை.. நந்தினியுடன் சேர்ந்து அவள் நண்பர்களான வனவிலங்குகள் செய்யும் சாகசங்களை படிக்கத் தவறாதீர்கள்.. குழந்தைகளே..
## ஒற்றைக்கண் மாயாவி இக்கதையில் வீரசிம்மன்..தான் மணக்க இருக்கும் ரத்தினபுரி சாம்ராஜ்யத்தின் இளவரசி நந்தினி தேவியை ஒற்றை கண் மாயாவி அவன் வேடத்திலேயே வந்து கவர்ந்து செல்வதை காண்கிறான். ஏழு கடல் தாண்டி ஏழுமலை தாண்டி ஒரு குகையில் சிறை வைக்கப்பட்டிருக்கும் இளவரசியை எப்படி மீட்கிறான் வீரசிம்மன்? வீரசிம்மன் சந்திக்கும் சவால்களை தன் பறக்கும் குதிரை வல்லபன் உதவியோடு எப்படி சமாளிக்கிறான் என்பதை விறுவிறுப்பான நடையில் இந்த கதை தொகுப்பு குழந்தைகள் படிப்பதற்கு மட்டுமல்ல.. குழந்தைகளுக்கு கதை செல்லும் பெரியவர்களும் படித்து மகிழும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது.. படித்து மகிழுங்கள்..
"வள்ளி சுப்பையா" என்ற பெயரில் முகநூலில் எழுதி வரும் தி. வள்ளி சிறந்த சிறுகதை எழுத்தாளர். 150க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், குறுந்தொடர்கள், நெடுந்தொடர்கள் எழுதியுள்ளார். மின்னிதழிலும் அச்சு இதழிலும் எழுதி வருகிறார். மனதுக்கு நெருக்கமான எளிய நடைக்கு சொந்தக்காரர்.
ஆசிரியரின் பிற வெளியீடுகள்...
1) "நினைவுச் சிறகுகள்" (இவர் கணவருடைய மருத்துவ அனுபவங்களின் பகிர்தல்.)
2)"நிழல் அல்ல நிஜம்.." யதார்த்த வாழ்வியல் சிறுகதைகளின் தொகுப்பு
3) "சுந்தர பவனம்" 100 அத்தியாயங்களைக் கொண்ட 5 தலைமுறைகளை அலசும் நாவல்..