எனது பெயர் பானுமதி நாச்சியார் பிறந்த ஊர் சிவகிரி எனது பெற்றோர் கிருஷ்ணன் அம்புஜம்..ஒரு கிராமத்தில் வைணவ சம்பிரதாயக் குடும்பத்தில் பிறந்தேன் வசித்த ஊரோ சைவம்.
ஆனாலும் இந்த திருப்பாவையில் ஆண்டாளின் பெருமையினால் என்னை ஆண்டாள் வசம் கொண்டு சென்றது என்னவோ உண்மை என்னுடைய உயர்நிலைப் பள்ளி பிறந்த ஊரில் முடிவற்ற பின் காலேஜ் கல்லூரிக்காக திருச்சி திருவரங்கம் சென்றேன் அங்கும் மூன்று வருடங்களில் திரும்ப தட்டச்சு சுருக்கெழுத்து டிப்ளமோ இன் காமர்ஸ் படித்தேன் திரும்பவும் சிவகிரியில் பணியை தொடங்கினேன் அந்த காலகட்டத்தில் ஹிந்தி பரிச்சை முழுவதையும் எழுதும் வாய்ப்பு கிடைத்தது தவறவிடாமல் உபயோகித்து ஹிந்தி பிரச்சாரத்துக்கு ஆனேன்.
இதற்கிடையில் சத்துணவு பணியாளராக வேலை கிடைக்க அதனை ஏற்றுக் கொண்டேன் ஒரு வருடத்தில் திருமணம் கூடகோவை சென்றேன் அங்கு எடுத்து அவதாரங்கள் பல ஆனாலும் என்னுடைய கற்றுக் கொடுக்கும் ஆர்வமும் கற்கும் ஆர்வமும் நிற்கவேயில்லை ..இடையில் நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுது எனது தமிழ் ஐயா கணேசன் அவர்கள் என்னை தமிழ் பண்டிதராக பார்ப்பதையே பெருமையாக சொல்லுவார் அதன் ஏக்கம் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டே இருக்க அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை ஆனால் எனது 55 வது வயதில் தமிழ் பல்கலைக்கழகம் நாங்கள் குடியிருந்த வேலை பார்த்த இடத்திற்கு பக்கத்திலேயே வந்ததால் அதில் சேர்ந்தேன் முதலில் எம் ஏ வைணவம் படிக்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் தமிழ் வாத்தியாரின் அந்த வார்த்தைகள் என்னை பீலிட்டும் பண்ண வேண்டும் என்று தோன்றியது எனவே திரும்பவும் மூன்று வருடங்கள் வீழ்ப்படித்து தமிழ் புலமையில் சிறந்தேன் இதற்கிடையில் தினமணி தினமலர் போன்ற நாளிதழ்களில் தான் ஞாயிற்றுக்கிழமை வரும் வாரமலர்களில் எனது ஆர்ட்டிகல்ஸ் வர ஆரம்பித்தது பானுசுந்தரம் என்று இவருடைய பெயரையும் சேர்த்து நிறைய எழுதினேன் எனது முது நிலையாகிய எம்.ஏ தமிழ் முடிக்கும் பொழுது எனது வயது 60
21 இல் அவரது மரணம் என் வாழ்க்கையைப் புரட்டி போட அதை மாற்றுவதற்காக திரும்பவும் பள்ளியில் சேர்ந்தேன் முகநூலிலும் என்னை நுழைத்துக் கொண்டு என் எண்ணங்களை எழுத்துக்களாக மாற்றினேன் நான் எழுதும் பதிவுகளை திரும்பவும் நான் வாசிக்க வேண்டும் என்ற உணர்வு வரும் பொழுது ஆகாய ஏதோ ஒரு எழுத்தாளுமே நம்மிடம் இருக்கிறது என்று உணர்ந்தேன் இதனைக் குறிப்பாக எடுத்துச் சொன்ன நட்புகள் இரண்டு பேர் ஒன்று டி கே கணேசன் அவர்கள் மற்றொன்று ஆரூர் மணி அவர்கள் இனி என் பயணம் எழுத்துக்களாய்ப் புத்தகங்களில் வலம் வர வேண்டும் இப்போது நான் முகநூலில் கவிதாயினி சிந்தனைச் சிற்பி தமிழ்க்கவி எனப் பல விருதுகள் வாங்கினாலும் எழுத்தாளர் என்பதில் முழுமை பெறுகிறது.
பேக்கிங்காம்டேல்ஸ் திருமதிஉமா அபர்ணா அவர்களுடன் இணைந்து அன்புள்ள தசாவதாரம், காவிய மாந்தர்கள், கண்ணனின் பால லீலைகள், நாடோடி கதைகள் என்று பாசப்பறவைகளாய் என்னுடன் பதின்மரைச் சேர்த்து எழுதி வெளியிட்டோம். எனது தனிப்பதிவாக, திருமாலும் திருப்பாவையும், பாதை மாற்றிய காதல், ஓடிப்போனவன், துக்கடாக்கள் ஆகிய புத்தகங்களும் புஸ்தகா டாட் காம் மூலம் வெளி வந்துள்ளன. திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்னும் இப்புத்தகம் என்னைப் புத்தகாவின் எழுத்தாளர் என்றபடி வரும் முதல் புத்தகமாகும்.