தமிழ்க் கல்வியின் நலிவு தொடர்ந்தால், எதிர்காலத்தில் தமிழின், தமிழர்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்ற அச்சம் நாவலின் தொடக்கமாக வரையப்பட்டிருக்கிறது. பண்டைய தமிழ் மன்னர்கள் தமிழின் முன்னேற்றத்திற்கு எப்படிப் பாடுபட்டார்கள்? ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நின்று அவர்களின் புகழைப் பறைசாற்றும் அளவுக்கு – தமிழரின் கலை நுணுக்கம் நிறைந்த நினைவுச் சின்னங்களை எழுப்பி – விரிந்து பரந்த பேரரசைக் கட்டி ஆண்டவர்கள் – எதனால் மறைந்துபோனார்கள்? அவர்களின் கனவு என்னாயிற்று? அவர்கள் நிறுவிய பேரரசுகள் ஏன் வெடித்துச் சிதறின? இவற்றை இப்புதினம் படம் பிடித்துக் காட்டுகிறது.
கல்கி உலகத்தமிழர்களிடையே நன்கு அறியப்பட்ட தமிழ் வார இதழாகும். இது முதன் முதலில் எழுத்தாளர் கல்கி கி. கிருஷ்ணமூர்த்தியால் 1941-இல் ஆரம்பிக்கப்பட்டது. அவருக்குப் பின்னர் டி. சதாசிவம், கல்கியின் புதல்வர் கி. ராஜேந்திரன், புதல்வி சீதா ரவி ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர். தற்போது ஆசிரியராக இருப்பவர் கல்கியின் பேத்தி லஷ்மி நடராஜன் ஆவார்.